ஜம்முவின் சோபியான் மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் தீடீர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வாகனத்தில் ஏற்கெனவே மர்ப நபர்களால் வெடிகுண்டு வைக்கப்பட்டதா அல்லது வாகனத்தின் பேட்டரி செயலிழந்ததன் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதா போன்ற பல்வேறு காரணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் குண்டுவெடிப்பால் வாகனம் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் பயங்கரவாதிகளின் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்ற பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.