நடிகர் விஜய் தற்பொழுது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68(Thalapathy 68) படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கிய தளபதி 68-ன் முதற்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து துருக்கியில் அடுத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தின் அப்டேட்டுகளை படக்குழுவினர் தொடர்ந்து அளித்து வரும் நிலையில், இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.
இதற்கு முன் விஜய் நடித்த லியோ படத்தில் அவருக்கு தங்கையாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக லவ் டுடே படத்தின் கதாநாயகி இவானா நடிக்கவிருக்கிறார்.
விஜய் தனது பல படங்களில் தங்கை செண்டிமெண்டில் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால், இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.