அதிநவீன தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தளபதி 68 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற மாஸ் பட்ஜெட் படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்திற்கு BGM கிங் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் தளபதி 68-ன் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து சிறப்பான தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அந்த அப்டேட் என்னவென்றால் தளபதி 68 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வித்தியாச படங்களுக்கு பெயர்போன வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் வேற லெவலில் உருமாகி வரும் இப்படத்திற்கு ‘The Greatest Of All Time’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. A Venkat Prabhu HERO என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், நடிகர் விஜய் பைலட் கெட்டப்பில் 2 தோற்றங்களில் இருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.