ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாக உள்ள ‘தளபதி 69’ திரைப்படத்தின் பூஜை இன்று சத்தமின்றி நடைபெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ள நிலையில் நடிகர் விஜய் படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என்றும் மக்கள் பணியாற்ற இனி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் ஒப்பொகொண்ட அணைத்து படங்களில் விஜய் நடித்து வரும் நிலையில் அவரது கடைசி படமாக விஜயின் 69 ஆவது படம் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விஜயின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்க KVN நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது . இதையடுத்து படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ் , பூஜா ஹெட்ஜ் , மமிதா , ப்ரியாமணி , கவுதம் மேனன் , உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் Thalapathy69 படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாக பூஜை புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.