தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் நடிகர் விஜயின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது முழு வீச்சில் உருவாகி வரும் படம் லியோ.
லோகேஷ் மற்றும் விஜய்யின் காம்போவில் இரண்டாவது முயறையாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடும் குளிரில் காஷ்மீரில் சில மாதங்கள் நடைபெற்றது . இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது .

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ,ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து இளசுகளின் கனவுக்கன்னி திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் லியோ படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமைகள் ரூ.60 கோடி மற்றும் ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநராக இருக்கும் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினின் காம்போவில் உருவான ரோபோட் ‘2.0’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தை தளபதியின் லியோ முறியடித்து அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப் படம் என்ற சாதனையை சத்தமின்றி படைத்துள்ளது.
தென்னிந்தியப் படங்களில் ஆர்ஆர்ஆர் மற்றும் சலார் ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக தொகைக்கு வாங்கப்பட்ட மூன்றாவது படம் தளபதியின் லியோ தானாம் .
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

பொதுவாக தளபதி மற்றும் லோகேஷ் படங்கள் தனி தனியாக வெளிவந்தால் அதனை திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் . இப்போது விஜய் மற்றும் லோகேஷ் காம்போவில் லியோ படம் உருவாகி வரும் நேரத்தில் இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை நிகழ்த்தி வருவதால் ரசிகர்கள் இப்போதிலிருந்தே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர் .