மகாராஷ்டிராவில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், காதலியின் உடலை துண்டு துண்டாக (body pieces) வெட்டி நாய்க்கு வீசி சென்ற காதலதனின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவருடைய காதலன் 36 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அதேபோன்று மகாராஷ்டிராவிலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிராவின் மீரா என்ற பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஏழாவது மாடியில் காதல் ஜோடி ஒன்று லிவிங் முறையில் மூன்று ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்த போது 32 வயதாகும் ஒரு பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், சடலத்தின் துண்டுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் காதலர் மனோஜ் சாஹினி என்ற நபர் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக (body pieces) வெட்டி அதில் ஒரு சில உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து நாய்களுக்கு உணவாக போட்டதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் செய்துள்ளனர்.