பாலா – அருண் விஜய் காம்போவில் உருவான வணங்கான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அருண் விஜய் போட்டுள்ள பதிவு இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர் என்று பெயரெடுத்த பாலாவின் இயக்கத்தில் நீண்ட நெடு நாடுகளுக்கு பின் உருவான திரைப்படமே வணங்கான் . ஆரம்பத்தில் சூர்யா நடிக்க கமிட்டான இப்படத்தில் சில பல காரணங்காளால் அவர் நடிக்காமல் போக அவருக்கு பதிலாக இப்படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் அருண் விஜய் கமிட்டானார்.
கிடைத்த வாய்ப்பை சரியாகி பயன்படுத்திக்கொண்ட நடிகர் அருண் விஜய் இப்படத்தில் உயிரைக்கொடுத்து நடித்துள்ளார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
Also Read : தமிழகத்தில் 18, 19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது . இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்து இயக்குநர் பாலா குறித்தும் நடிகர் அருண் விஜய் போட்டுள்ள பதிவு இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
இதுகுறித்த அருண் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
“கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு மிக்க நன்றி. ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அனைவரின் இதயத்தையும் வென்று விட்டோம். எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான். எனக்குள் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். இதற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி” என நடிகர் அருண் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.