மத்திய பிரதேசத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு 2 வயது குழந்தை எதிர்பாராத விதமாக 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் (borewell) விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி, 2 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது குழந்தை மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சோஹூர் அருகே உள்ள மூங்வாலி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளை கிணற்றிற்குள் (borewell) தவறி விழுந்துள்ளார்.
அதையடுத்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கபட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் வருகின்றனர்.
தற்போது வரை ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் இந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி நேற்று 50 அடி ஆழத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று குழந்தை சுமார் 100 அடி ஆழத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணி கடந்த 2 நாட்களைக் கடந்து நடைபெற்று வருவதால், குழந்தையை மீட்க தற்போது தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவுடன் இராணுவமும் மீட்பு பணியில் இறங்கி ரோபோ உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, குழந்தைக்கு ஆழ்துளை வழியாக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 55 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு மயக்கமடைந்த நிலையில் குழந்தையை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
அதையடுத்து, உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.