கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து (bus) விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து (bus) மைசூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காலிகட் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து வளைவில் இருக்கும் ஒரு மரத்தில் மோதி நின்றுள்ளது.
அந்த மரத்தில் மோதி பேருந்து நிற்காவிட்டால் கிட்டத்தட்ட 200 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து நொறுங்கி இருக்கும் எனவும், இந்த பெரும் விபத்து அந்த மரத்தினால் தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான அந்தப் பேருந்தில் 38 பேர் வரை பயணம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுத்ததை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் பேருந்தில் இருக்கும் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
பேருந்தின் கதவு திறக்கப்பட முடியாமல் இருந்த நிலையில், ஜன்னல் வழியாக பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் தற்போது வரை எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளனர்.