இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில், கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு சிறுமி இறந்தார், அதே நேரத்தில் மாநிலத்தின் குலு மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தில் ஆறு பேர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் காயமடைந்ததாகவும் சிம்லா போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 6 மணியளவில் சலால் பஞ்சாயத்தில் உள்ள சோஜ் கிராமத்தில் வெள்ளத்தில் ஐந்து கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மீட்புக் குழுக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் நிலச்சரிவு காரணமாக மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்றது என்று மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் கனமழை காரணமாக குலு மாவட்டத்தின் மணிகரன் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சோஜ் கிராமத்தில் டஜன் கணக்கான வீடுகள் மற்றும் முகாம் தளங்கள் சேதமடைந்துள்ளதாக எஸ்பி குலு, குர்தேவ் சர்மா தெரிவித்தார்.
“வெள்ளம் காரணமாக, ஏழு வீடுகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன, மேலும் மூன்று திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது, மேலும் மக்கள் ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
#WATCH | Himachal Pradesh: Flash flood hits Manikaran valley of Kullu district due to heavy rainfall, dozens of houses and camping sites damaged in Choj village: SP Kullu Gurdev Sharma pic.twitter.com/NQhq8o8JXC
— ANI (@ANI) July 6, 2022
இமாச்சல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.இதனை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, இமாச்சல பிரதேசம் இன்று தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்சிம்லா, சோலன், சிர்மௌர், பிலாஸ்பூர், ஹமிர்பூர், மண்டி மற்றும் உனா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சிம்லா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.