நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் நாளை வரை மட்டுமே செல்லும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, கடந்த 2016ல் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ரூ.2000 நோட்டுக்கள் 2023 செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனை அடுத்து 5 மாதங்கள் அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது, இதையடுத்து பலரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி வேறு பணத்தை மாற்றி வந்தனர்.
இந்த காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் அரையாண்டு விடுமுறையும் வருவதால் இன்று ஒரு நாள் மட்டுமே வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியும்.

அத்துடன் பெட்ரோல் நிலையங்கள், ஆம்னி பேருந்துகளிலும் , டொமேட்டோ ஸ்விகி, உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவன பணியாளர்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்த்து உள்ளனர்.