மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு இந்த மாதம் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் (Cabinet changed) செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, நிர்வாக வசதிக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது (Cabinet changed) எனவும், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டாலும், தொழில்துறையினருக்கு முழு ஆதரவை அளிப்போம் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதன்படி, தற்போதுள்ள அமைச்சரவை..
1.மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்
2.துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர்
3.தங்கம் தென்னரசு, நிதி அமைச்சர்
4.கே.என்.நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
5.ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
6.க.பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர்
7.எ.வ.வேலு, பொதுப்பணித் துறை அமைச்சர்
8.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , உழவர் நலத்துறை அமைச்சர்
9.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
10.டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அமைச்சர்
11.எஸ்.ரகுபதி, சட்டத் துறை அமைச்சர்
12.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சர்
13.கே.ஆர்.பெரியகருப்பன், கூட்டுறவுத்துறை
14.தா.மோ.அன்பரசன், ஊரகத் தொழில்துறை அமைச்சர்
15.எம்.பி.சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்
16.பெ.கீதா ஜீவன், சமூக நலத்துறை அமைச்சர்
17.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை
18.ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
19.கே.இராமச்சந்திரன், சுற்றுலாத்துறை
20.அர.சக்கரபாணி, உணவு துறை அமைச்சர்
21.வே.செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
22.ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
23.மா.சுப்பிரமணியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
24.பி.மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
25.எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்
26.பி.கே.சேகர் பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
27.மனோ தங்கராஜ், பால்வளத் துறை அமைச்சர்
28.கே.எஸ்.மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
29.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
30.சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
31.சி.வே.கணேசன், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
32.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
33.மா.மதிவேந்தன், வனத்துறை அமைச்சர்
34.என்.கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
35.உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்