குமரியில் நாளை திமுக இளைஞரணி செயல்வீரர் கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் நடைபெறும் மாபெரும் இளைஞரணி செயல்வீரர் கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை உள்ளார் .
இந்நிலையில் இதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று பார்வையிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.