அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை double leaf symbol எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சம்பவம் அதிமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப் படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் இடையே இருந்த திரை மறைவு “நீயா நானா?” யுத்தம் வெட்ட வெளிச்சமாகியது.
இதையும் படிங்க : ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாள் ஊட்டி சுற்றுப்பயணம்!!
அதன் தொடர்ச்சியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டே நீக்கப்பட்டனர்.
அதன் பின்னர், தனக்கென தனி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து, “நாங்கள் தான் ஒரிஜினல் அதிமுக” என போட்டி அதிமுகவை நடத்தி வந்தார்.
ஓ.பி.எஸ். இதற்கிடையில் அதிமுகவை கைப்பற்ற அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக மாறிய நிலையில், நீதிமன்றமும் அவரையே அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதி செய்தது.
ஆனால், பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்த வேளையில், “இரட்டை இலை சின்னத்தில் double leaf symbol தான் போட்டியிடுவோம்” எனவும், “இரட்டை இலையை முடக்குவோம்” எனவும் அடிக்கடி கூறி வந்தார் ஓ.பி.எஸ்.
எனவே, ‘அதிமுகவில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்ட ஓ.பி.எஸ்., கட்சியின் கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அந்த வழக்கில், கட்சியின் லெட்டர் ஹெட், சின்னம் மற்றும் கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதித்து கடந்த நவம்பர் 7, 2023 அன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி சதீஷ்குமார்.
இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இம்மாதம் 18ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி சதீஸ் குமாரின் இடைக்கால உத்தரவை உறுதி செய்து ஓ.பி.ஏஸ்.சுக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
இதனால், இரட்டை இலையில்தான் double leaf symbol போட்டி என திரும்பத்திரும்ப கூறி வந்த ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வைக்க உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தத் துவங்கினார்.
தற்போது, அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனி அணியாக சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஓ.பி.எஸ்., ஒன்று இரட்டை இலை சின்னம் தனக்கு ஒதுக்கப்பட வேண்டும், அல்லது அது முடக்கப்பட வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் அது எடப்பாடி பழனிச்சாமியின் கைகளுக்கு சென்று விடக் கூடாது” எனவும் தனக்கு சாதகமான சட்ட திகளை ப்யன்படுத்தி முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக, சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் முதல்வர் ஓபிஎஸ்.
அதில், “தேர்தல் ஆணைய தரவுகளின்படி, நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால், வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோருவதற்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திட எனக்கு அதிகாரம் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
அதே போல, அவரது ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தியும் ‘அதிமுகவின் உரிமை தொடர்பான வழக்கில் இறுதி முடிவை எட்டும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்குமே ஒதுக்க கூடாது’ என்று தேர்தல் ஆணையத்தில் தனியாக ஒரு மனு அளித்திருந்தார்.
அவரைப் போலவே, “அதிமிக உரிமை தொடர்பான மூல வழக்கின் இறுதி முடிவு தெரியும் வரை அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்புக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ ஒதுக்க கூடாது’ என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரும் மனு அளித்திருந்தார்.
இவர்களை போலவே, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி தொடர்ந்த பழைய வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ‘இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரத்தை கட்சியின் அவைத் தலைவருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அதே கோரிக்கையுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவும் அளித்தனர். இந்த வழக்கு நேற்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “எங்களிடம் உள்ள ஆவணங்களில் பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளர் என்று உள்ளது.

எனவே, அதிமுக சார்பில் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும், அவர்களை அங்கீகரிக்கவும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவங்களில் கையெழுத்திடவும் பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு தடை இல்லை” என்று தெரிவித்து இருந்து தேர்தல் ஆணையம்.
இந்நிலையில்தான், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை நேற்று (28.03.2024) ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் ஒவ்வொரு சட்ட நடவடிக்கையுமே, எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக மீதுள்ள உரிமை குறித்து சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கி வரும் நிலையில்,
தற்போது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ளதும், வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் ஏ.பி. படிவங்களில் கையெழுத்து இடும் உரிமையை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கி இருப்பதும் அதிமுகவின் அரசியல் வரலாற்றில் முக்கியமான விசயங்களாக பார்க்கப் படுகின்றன.
இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்., தனக்கு வாளி, திராட்சை கொத்து அல்லது பலாப்பழம் ஆகிய மூன்று சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு விண்ணப்பித்து இருக்கிறார்.
அதில், வாளி சின்னமே அவருக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கின்றன தகவல்கள்.
இதையும் படிங்க : சொந்த மகனிடம் கடன் பெற்றுள்ள ஓபிஎஸ்