double leaf symbol issue : கடந்த 2022 ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இருந்து விரட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்தும் அன்றே நீக்கப் பட்டனர்.
அதன் பின்னர், தனக்கென தனி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து, “நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக” என போட்டி அதிமுகவை நடத்தி வந்தார் ஓ.பி.எஸ்.
இதற்கிடையில் அதிமுகவை கைப்பற்ற அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்த நிலையில், நீதிமன்றமும் அவரையே அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதி செய்தது.
ஆனால், பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்த வேளையில், “இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” எனவும், “இரட்டை இலையை முடக்குவோம்” எனவும் அடிக்கடி கூறி வந்தார் ஓ.பி.எஸ். எனவே,
‘அதிமுகவில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்ட ஓ.பி.எஸ்., கட்சியின் கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அந்த வழக்கில், கட்சியின் லெட்டர் ஹெட், சின்னம் மற்றும் கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதித்து கடந்த நவம்பர் 7, 2023 அன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி சதீஷ்குமார்.
இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இம்மாதம் 18ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி சதீஸ் குமாரின் இடைக்கால உத்தரவை உறுதி செய்து ஓ.பி.ஏஸ்.சுக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
இதனால், இரட்டை இலையில்தான் போட்டி என திரும்பத்திரும்ப கூறி வந்த ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வைக்க உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தத் துவங்கினார்.
அதன்படி, தற்போது பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட தயாராகி வரும் ஓ.பன்னீர் செல்வம் தற்போது புதியதொரு மனுவையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “ஓ.பி.எஸ். ஆகிய நான் அதிமுகவில் வகித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கூறி உள்ளது.
இதையும் படிங்க : ராதிகா vs விஜய பிரபாகரன்.. கலக்கப் போவது யார்? கவிழப் போவது யார்..?
தவிர, கடந்த 42 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ, அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்துள்ளார் double leaf symbol issue.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இந்த மனுவானது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நாளை மறுநாள் அதாவது,
25.03.2024, திங்கட்கிழமை அன்று 4-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ளதால், அன்றாவது ஓ.பி.எஸ்.சுக்கு தாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது எப்போதும் போல, எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வருமா?
அல்லது இரண்டு பேரில் யாருமே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட வாய்ப்புள்ளதா? என பட்டிமன்றம் நடக்கத் துவங்கி உள்ளது அதிமுகவில்.
இதற்கிடையே, கட்சியின் உரிமை சம்பந்தமான சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதில் இறுதி முடிவு எட்டும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்க்க் கூடாது என தேர்தல் ஆணையத்தை நாடியிருந்தார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி.
எனவே, அதற்கு பதிலளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்த நிலையில், “சூரியமூர்த்தி அதிமுகவில் அடிப்படை உறுப்பினரே இல்லை.
சின்னம் தொடர்பாக மனு அளிக்க அவருக்கு உரிமை இல்லை” என எடப்பாடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் “என்னை அதிமுக உறுப்பினர் இல்லை என்று எந்த சிவில் நீதிமன்றமும் இன்றளவும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
எனவே பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ ஒதுக்க கூடாது என தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று புதியதொரு மனுவை தேர்தல் ஆனையத்தில் சமர்ப்பித்துள்ளார் திண்டுக்கல் சூரியமூர்த்தி.
இதையும் படிங்க : ராதிகா vs விஜய பிரபாகரன்.. கலக்கப் போவது யார்? கவிழப் போவது யார்..?