2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ம் தேதி புதுக்கோட்டை(Pudukottai )மாவட்டம் தச்சங்குறிச்சியில் 2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், மாடு பிடிவீரர்களும் போட்டிக்காக மூழுவீச்சில் தயாராகி வருகின்றனர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் பிரதானமானது ஜல்லிக்கட்டு போட்டி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ‘ஏறு தழுவல்’ என்றும் அழைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான்.
அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள விளையாட்டாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர்.
2023 ஆண்டு முடிவடைந்து 2024 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
அதன் படி 2024 ஜனவரி மாதம் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை. இங்கு நூற்றுக்கணக்கான மாடுகள் பங்குபெறும். அதே போல் ஏராளமான மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கி பரிசுகளை தட்டிச் செல்வார்கள்.
புதுக்கோட்டை (Pudukottai) மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தமிழகத்திலேயே அதிக வாடிவாசலையும், அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாக இருந்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் ஒவ்வோரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி முதலில் தொடங்கும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், மாடு பிடிவீரர்களும் போட்டிக்காக மூழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம்
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக சென்னை மெரினாவில் புரட்சி வெடித்தது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதுமே தன்னெழுச்சியமாக மக்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தை உலகமே உற்று கவனித்தது.
2017 ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. குறிப்பாக மரினாவில் நடை பெற்ற போராட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்த்தது. தமிழர்கள் மொழிக்காகவும், கலாச்சாரத்திற்காவும், தங்கள் உரிமைக்காகவும் தன்னெழுச்சியாக ஒன்று சேரக்கூடியவர்கள் என்பதை அந்த போராட்டம் நிரூபித்தது.