செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன் . இதுவரை பல சூப்பர் படங்களை இயக்கி வந்த இவர் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து அதிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் இயக்குநர் செல்வராகவன் தற்போது இயக்க போகும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Also Read : சிறப்பான சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு – வெளியானது ‘படை தலைவன்’ படத்தின் ட்ரெய்லர்..!!
அதன்படி ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்தில் நடித்து, இசையமைத்து, படத்தை தயாரிக்கவும் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி படத்திற்க்கு ‘Mental மனதில்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .