கேரள மாநிலம், கொச்சி பகுதியில் 45 வயதாகும் சஜீவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. இவருக்கு வயது 35. இந்நிலையில், சஜீவன் தனது மனைவி காணாமல் போய் விட்டதாக கடந்த மாதம் காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரம்யாவை அவர் கணவரே கொலை செய்து வீட்டு வாசலில் புதைத்துவிட்டு (buried) காணாமல் போய்விட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சஜீவனுக்கும் ரம்யாவுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்திருக்கிறது. இந்நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இது சம்பந்தமாக மனைவி ரம்யாவிடம் கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சஜீவன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சஜீவன் கயிற்றால் ராமாயாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும், பகல் நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்ததால் அவரின் உடலை வீட்டில் மறைத்து வைத்து, பின்னர் அதனை வீட்டு முற்றத்தில் குழிதோண்டி புதைத்து (buried) இருக்கிறார்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்த குழந்தைகள் தாயை தேடிய நிலையில், சஜீவன் அம்மா வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். இதை வெளியே சொன்னால் நமக்கு அவமானம். அதனால், அம்மா பெங்களூருக்கு படிக்க போயிருப்பதாக யார் கேட்டாலும் கூறவேண்டும் என பிள்ளைகளை நம்ப வைத்திருக்கிறார்.
இதையடுத்து, ரம்யா குறித்து உறவினர்களும் கேட்ட நிலையில் பியூட்டிஷியன் படித்திருக்கும் ரம்யா பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறி சமாளித்திருக்கிறார். ஆனால், ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் ரம்யா யாரிடமும் போனில் கூட பேசவில்லை என்றும், அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் உறவினர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சஜீவனிடம் அவரின் மனைவி பற்றி கேட்டு நெருக்கடி செய்திருக்கிறார்கள் உறவினர்கள்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாத சஜீவன் மனைவி ரம்யா வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் வெளிநாட்டிற்கு சென்று விட்டார் என உறவினர்களிடம் கூறியதுடன் அவரை காணவில்லை என கூறி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து, ரம்யாவின் குழந்தைகளிடமும் அவரது கணவன் சஜீவனிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் ரம்யாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, ரம்யாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சஜீவனையும் கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.