மனைவியை விற்று ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய கணவன்!

the-husband-who-sold-his-wife-and-bought-a-smartphone
Spread the love

ஒடிசாவைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அதே மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் 17 வயது சிறுவன், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவரிடம் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்று அந்தப் பணத்தில் தனக்கென்று ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கியுள்ளான்.

அதன் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த சிறுவன், தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளான். இதனை அடுத்து பெண்ணின் குடும்பத்தார், ஒடிசா காவல்துறையிடம் புகரளித்த நிலையில் காவல்துறையினர் அந்தச் சிறுவனிடம் விசாரனை மேற்கொண்டனர்.

the-husband-who-sold-his-wife-and-bought-a-smartphone
the husband who sold his wife and bought a smartphone

தனது மனைவியை விற்றுவிட்டதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து 17 வயது சிறுவனை கைது செய்த ஒடிசா காவல்துறையினர் பெண்ணை மீட்க ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு விரைந்தனர்.

பெண்ணிற்காக முதியவர் 1.8 லட்சம் அளித்திருப்பதாக கூறி உள்ளூர் மக்கள், பெண்ணைத் திரும்ப அழைத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இருப்பினும் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஒடிசா காவல்துறையினர் பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.


Spread the love
Related Posts