ராஜஸ்தானில் மதுபோதை ஆசாமி ஒருவர் தன்னுடைய மனைவியை பைக்கில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற வீடியோ வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த 32 வயதாகும் பிரேமராம் மதுபோதைக்கு அடிமையானவர்.
பிரேமராம் மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்றும் மதுபோதையில் இருந்த பிரேமராம் தனது மனைவியை தாக்கி, தனது பைக்கில் மனையின் கைகளை கட்டி கல், மணல் நிறைந்த பாதையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
பைக்கை பிரேமராம் வேகமாக ஓட்டிச்செல்ல அவரது மனைவி தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் மனதை உலுக்குகிறது.
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட நபரான பிரேமராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.