காதலன் வீட்டில் தகராறில் ஈடுபட்ட போது தட்டி கேட்ட தலைமை காவலரை சட்டையை பிடித்து பெண் ஒருவர் சண்டையிட்ட வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் திருவொற்றியூர் எஸ்பி கோயில் தெரு பகுதியை சேர்ந்த ரேவேந்திரகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பாகவே தனக்கு 5 சவரன் தாலி, சரடு , இருசக்கர வாகனம், பணம் ஒரு லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ரேவேந்திரகுமார் வீட்டில் திருமணத்தை நிறுத்தி விட்டதால் , செல்வி அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறில் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூருக்கு வந்த செல்வி தகராறில் ஈடுபட்டதால் உடனடியாக ரேவேந்திர குமார் வீட்டில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமை காவலர் சரவணன் மற்றும் காவலர் இருவரும் பெண்ணை தட்டி கேட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார் அடிக்கும் படியும் கூறியுள்ளனர் , ஆனால் அதை ஏற்க மறுத்த செல்வி காவலர் உடன் தகராறில் ஈடுபட்டு பொய்யான குற்றசாட்டை முன்வைத்து அவர் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் காவலர் கையை தட்டி விடவே ஆத்திரமடைந்த செல்வி தலைமை காவலரின் கையை கடித்து உள்ளார்.
இந்நிலையில் உடனே செல்வியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், தாக்கிய குற்றத்திற்காகவும் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.