ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் செப்.,7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் “ஜெயிலர்”. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் இந்தப்படம், இதுவரை இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் காசோலையுடன், பிஎம்டபள்யூ காரையும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நெல்சனுக்கும் பாராட்டு தெரிவித்து காசோலை வழங்கிய கலாநிதி மாறன், இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.
இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் செப்.,7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.