உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது, நபர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையேறி வந்த மர்ம நபர் அங்கிருந்த சல்மான் ருஷ்தியின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக் குத்து தாக்குதலால் சரிந்து கீழே விழுந்த சல்மான் ருஷ்தியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக காவல்துறை சுற்று வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர் 24 வயதுடைய ஹாதி மாடார் என்பது தெரிய வந்துள்ளது.
சல்மான் ருஷ்தி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரின் கல்லீரல் தாக்குதல் காரணமாக மீக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், இந்த தாக்குதல் காரணமாக அவர் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் சல்மான் ருஷ்டியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அவரது உதவியாளர் ஆண்ட்ரூ வெய்லி தகவல் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரி முஸ்லீமான எழுத்தாளர் சல்மான் ருஷ்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். 1988ஆம் ஆண்டில் அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற புத்தகம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவை விட்டு வெளியேறி 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் சல்மான் ருஷ்தி மீதான இந்த கொலைவெறி தாக்குதலுக்கு அவரின் எழுத்துக்களும், கருத்துக்களுமே காரணம் எனக் கூறப்படுகிறது.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். சாத்தானின் வேதங்கள் அதன் காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும்… நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்” என்றும் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.