நாடு முழுவதும் கரோனா தொற்று (Corona infection) உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,565 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிதாக பரவி வரும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குளிர் காலத்துக்கு பிறகு இது மேலும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாதிப்பால் கர்நாடகா, கேரளா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸின் துணைதிரிபான ஜேஎன்.1 வகை கரோனா தொற்று, நம் நாட்டில் கேரளாவில் தான் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 196 பேரிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கரோனா தொற்று (Corona infection) ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவுடன்,
அதன் பரவலைத் தடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் தீவிர அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : https://itamiltv.com/7-people-who-broke-the-ban-in-the-sea-during-the-new-year-2024-celebration-were-found-dead-district-news-chennai/
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,565 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,366 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,44,765,50 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் இன்று கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கையின்படி, “பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளா (83 பேர்), கோவா (51 பேர்), குஜராத் (34 பேர்), கர்நாடகா (8 பேர்), மகாராஷ்டிரா (8 பேர்), ராஜஸ்தான் (5 பேர்), தமிழ்நாடு (4 பேர்), தெலங்கானா (2 பேர்) , ஒடிசா மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் என 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் இருவர், தமிழ்நாட்டில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி வரை தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் குறைந்திருந்தது. ஆனால் கரோனா புதிய திரிபு மற்றும் குளிர்காலம் வந்த பிறகு தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கிய கரோனா தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது தினசரி பாதிப்பு லட்சங்களில் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 5.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம்1.19 சதவீதமாகவும் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.