கனடாவில் 15 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 20 நாடுகளுக்கும் மேல் பரவி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒமிக்ரான் பரவிய நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளதோடு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கனடாவில் 15 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கனடா சுகாதாரத்துறை அதிகாரிகள், கனடா முழுவதும் கடுமையான நோய் தொற்று மீண்டும் உயரத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது.