தேர்தல் நேரத்தில் தான் எங்களுடைய ஞாபகம் உங்களுக்கு வருமா என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை(jothimani) ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி(jothimani) கலந்து கொள்ள கிருஷ்ணாபுர பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது கூட்டத்திற்கு வருகை தந்த எம்பி ஜோதிமணியிடம் அதே பகுதியை சேர்ந்த நபர் தேர்தல் நேரத்தில் தான் எங்களுடைய ஞாபகம் உங்களுக்கு வருமா..ஓட்டு கேப்பதற்கு மட்டும் வந்தீர்கள்.
அதற்கு பிறகு இப்போது தான் வந்து உள்ளீர்கள்.குறிப்பாக தங்களுடைய தொகுதிக்கு நன்றி கூட தெரிவிக்க வரவில்லை என கேள்வி எழுப்பினர். இதற்க்கு ஜோதிமணி எம்பி தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறேன்.
நீங்கள் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட வந்துள்ளீர்கள் என்று ஆவேசமாக பேசினார். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்பி ஜோதிமணியிடம் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.