Ram temple event:ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிறுத்தி அயோத்தியில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன.
மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற இருக்கிறது.
இதை இந்திய மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்வதற்காக நேரடி ஒளிபரப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 6 கோடி பேரை பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்துள்ளது.
மேலும் அயோத்தியில் விழா நடைபெறும் அதே சமயத்தில் தங்கள் ஊர்களில் இருந்தபடியே கிராம மக்கள் அந்த விழாவை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பங்கேற்கும் பிரபலங்கள் :
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள்,இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபர்கள்,
திரை பிரபலங்கள், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அனுபம் கேர், அக்ஷய் குமார், ரஜினிகாந்த், சஞ்சய் லீலா பன்சாலி, சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ், ரிஷப் ஷெட்டி
மதுர் பண்டார்கர், ரன்பீர் கபூர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சன்னி தேவ்கன், யாஷுக்கு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க அழைப்புவிடுப்பட்டது.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1744972278407012693?s=20
குடியரசுத் தலைவருக்கு அழைப்பு மறுப்பு:
ஆனால் ,அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது இந்திய அரசின் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு ,
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்க்கு அழைப்பு (Ram temple event)விடுக்கப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.