கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில், தன்னை சாமியாராக அவதானித்துக் கொள்ளும் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் வைத்து ‘பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் சிஷ்யை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் – நடைபெற்று வரும் நிலையில், பாலியல் வழக்கில் நித்தியானந்தா ஆஜராக கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்த பாலியல் தொல்லை வழக்கு வியாழக்கிழமை ராமநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வரும் கைலாசா அதிபர் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில், தன்னை சாமியாராக அவதானித்துக் கொள்ளும் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் வைத்து ‘பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் சிஷ்யை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் – நடைபெற்று வரும் நிலையில், பாலியல் வழக்கில் நித்தியானந்தா ஆஜராக கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்த பாலியல் தொல்லை வழக்கு வியாழக்கிழமை ராமநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் குற்றவழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வரும் கைலாசா அதிபர் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.