தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். 2025 ஜன.1ஆம் தேதிக்குள் 18 வயது நிறைவடைவோரும் இதில் பதிவு செய்யலாம்.
Also Read : வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி – கேரள வங்கி அறிவிப்பு..!!
அக். 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ. 28ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் அவரவர் இருக்கும் இடங்களில் நடத்தப்படும் முகாம்களில் தங்களின் வசதிக்கேற்ப பெயர் சேர்த்தால் மற்றும் திருத்தும் செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.