குறிப்பிட்ட சில நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14ஆம் தேதி வரை வெறும் கண்ணால் ( space station ) பார்க்கலாம் என அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
Also Read : 10 பேர் உயிரை பறித்த பட்டாசு ஆலை விபத்தில் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் கைது..!!
சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருக்கும் காரணத்தால், இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர் . இதனால் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் வானத்தை ஆவலுடன் பார்த்தபடி இருந்தனர். சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் கோவை, உதகை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மாவட்ட மக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது
அதன்படி மே 12 காலை 4.14, இரவு 7.07, மே 13 காலை 5, மே 14 காலை 4.14 மணிக்கு வின்கலத்தை ( space station ) வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.