மறைந்த கேப்டன் விஜயகாந்தின் அன்பு மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள ‘படை தலைவன்’ ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த் . தமிழ் மொழி படங்களில் மட்டுமே நடித்து உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை பெற்ற விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் காலமானார் .
இதையடுத்து இவரது முத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலிலும் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவிலும் கால்பதித்துள்ளனர்.
Also Read : தென் சென்னை படம் எப்படி இருக்கிறது..? – திரை விமர்சனம்
அந்தவகையில் தற்போது சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘படை தலைவன்’ . அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க அவருடன் சேர்ந்து கஸ்தூரி ராஜ ,யாமினி, முனீஸ்காந்த்,அருள் தாஸ்,,கருடன் ராம் ,ரிஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள.
இசைஞானி இளையராஜா இசையில் தயாராகி உள்ள இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஏராளமான பன்ச் மற்றும் ஆக்சன் காட்சிகள் நிரம்பி நிற்க இடையில் ஏஐ மூலம் விஜயகாந்த் வருவது சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
இதோ படைத்தலைவன் படத்தின் ட்ரெய்லர்..