நியாமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஜன.19-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் (Temporary withdrawal) உறுதியளித்துள்ளன .
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நியாயமான சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கழுவுரி மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மாணவர் கொடுத்த மனுவில் கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்து, போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது.
இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரை, 7,000 போக்குவரத்து தொழிலாளர்களா? இல்லை பொதுமக்களா? என்ற நிலை நீடித்து வருகிறது.
எனவே, போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும்.
நேற்று அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அதிகாரிகளை தங்களது பணிகளை மேற்கொள்ள விடாமல், இடையூறு ஏற்படுத்தி அவர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர் என்று வாதிட்டார்.
இந்த பக்கம் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,அரசு தரப்பில், கடந்த 2014-ம் ஆண்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
இதையடுத்து பேசிய நீதிபதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. ஏற்கெனவே அரசும் 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
எனவே, பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?” என்று தொழிற்சங்கங்களுக்கு கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து சிந்தித்த தொழிற்சங்கங்கள் , தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர் .
ஜன.19-ம் தேதி வரை தங்களது போராட்டத்தை நிறுத்திவைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
Also Read : https://itamiltv.com/control-the-global-warming-issue/
தொழிற்சங்கங்கள் கொடுத்த உறுதியை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்குத் திரும்ப அறிவுறுத்தினார் .
பணிக்குத் திரும்பும் பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், பணிக்குத் திரும்பும் பணியாளர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.
கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிமாக (Temporary withdrawal) நிறுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்தியை கொடுத்துள்ளது.