வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு “மிதிலி” என பெயரிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இந்த புயலினால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..,
“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இன்று காலை 5.30மணி நிலவரப்பரடி வடக்கு வட மேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இது தற்போது மேலும் வலுவடைந்து புயலாக நாளை மாறக்கூடும். இந்த புயலுக்கு மாலத்தீவின் பரிந்துரையின் படி ‘மிதிலி’ என பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 18 ஆம் தேதி இந்த புயலானது வங்கதேசத்தின் மொங்கலோ- கோபுரா பகுதியில் ஆழ்ந்த காழ்ற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும். இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை. வளி மண்டல் சுழற்ச்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும்” என தெரிவித்துள்ளது.