KN NEHRU : சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் நடப்பாண்டில் தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது :
சென்னையைப் பொறுத்த வரை 1040 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாகக் கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்.எல்.டி வழங்கப்பட உள்ளது.
குடிநீர் வசதி எல்லா இடங்களிலும் சரியாக உள்ளதா, பழுது பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும் இந்த துறைசார்ந்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி கேட்டறிந்தோம் .
மோட்டார்கள் சரியில்லாத இடங்களில் சரி செய்யும் வகையிலும், பைப்கள் பழுதடைந்து இருக்கும் இடங்களில் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/kl-rahul-injury-in-critical-condition/
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் நடப்பாண்டில் தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை
தமிழகத்தில் போதுமான அளவு மழை பெய்துள்ளதால் இந்த ஆனது தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது .என அமைச்சர் (KN NEHRU) கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.