தெலங்கானாவில் திருடச் சென்ற இடத்திலேயே அசந்து தூங்கிய திருடனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானாவில் தனியார் மதுக் கடையில் திருட சென்ற வாலிபர் ஒருவர் பணத்தை திருடிக் கொண்டு, மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக சிசிடிவியின் HARDDISK-ஐ திருடி விட்டு,அங்கிருந்த மதுவை அளவுக்கு அதிகமாக அருந்தி தலைக்கேறிய மதுபோதையில் அங்கேயே உறங்கியுள்ளார்
காலையில் கடைக்கு வந்த உரிமையாளர் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மது போதையில் இருந்தவரை நீண்ட நேரமாக எழுப்ப முயன்றுள்ளனர் . ஆனால் போதையில் ஒய்யாரமாக இருந்த அந்த திருடனாய் அவர்களால் எழுப்பவே முடியவில்லை .
இதையடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்த போலீசார் திருடனை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
திருட சென்ற இடத்தில் பணத்தை திருடியவுடன் அப்பிட்டாகாமல் முட்ட முட்ட மதுவை குடித்துவிட்டு அங்கயே படுத்துறங்கிய சம்பவம் நகைப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.