Thiruma condemn-இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளதாக விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் மலர் வைத்து பிரதமர் மோடி வணங்கினார்.
கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார்; பெரிய கோவிலில் தங்குவார் என பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க : http://Ram Mandir- ”திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத அமித்ஷா..” காரணம் இது தான்..!!
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பல நூற்றாண்டுகளாக நம்மால் இப்பணியை செய்ய முடியாமல் போனதற்கு நமது முயற்சியிலும், தியாகத்திலும், தவத்திலும் ஏதோ குறை இருக்க வேண்டும்.
இதற்காக நானும் ஸ்ரீராமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இன்று இப்பணி நிறைவடைந்துள்ளது.
இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று உணர்ச்சி பொங்க பிரதமர் மோடி பேசினார்.
இந்த நிலையில்,இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளதாக விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749428892023374156?s=20
இது குறித்து விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது.
இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.
இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது.
இது இசுலாமியர், கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்திற்கும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது என்று திருமாவளவன் (Thiruma condemn) கண்டனம் தெரிவித்துள்ளார்.