பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன்.
இதுகுறித்து தொல்.திருமாவளவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளேன்.
நாடாளுமன்றத்தில் சந்திராயன் 3 வெற்றி தொடர்பான விவாதத்தின் போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலி அவர்கள் மீது அருவருக்கத்தக்க வகையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளில் வெறுப்பை கொட்டினார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை ஆய்வுக் குழுவின் விரிவான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் ரமேஷ் பிதூரி அவர்களின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன் என தொல்.திருமாவளவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.