Ambedkar statueஅம்பேத்கர் சிலை மீது தாக்குதல் நடத்த முயன்றவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைச் சிறைப்படுத்திட வேண்டும் என்று விசிக கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை என்னும் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அம்பேத்கர் சிலையை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு சிலை மீது படாமல் அருகில் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் நான்கு பேர் கொண்ட கும்பலை விரட்டிப்பிடிக்க முயன்றனர். அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், இது குறித்து கிராம மக்கள் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி, சதீஸ், விஜயஜ், வெற்றி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சென்னை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு – காவல்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்!!
அம்பேத்கர் சிலை மீது தாக்குதல் நடத்த முயன்றவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைச் சிறைப்படுத்திட வேண்டும் என்று விசிக கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடலூர் மாவட்டம், அம்பலவாணன்பேட்டை கிராமத்திலுள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை மீது பெட்ரோல் குண்டுவீசி சிலையைச் சேதப்படுத்தி அவமதிப்பதன் மூலம் வன்முறையைத் தூண்ட ஒரு கும்பல் முயற்சித்திருப்பது தெரிய வருகிறது.
இத்தகைய சமூகவிரோதப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் பின்னிருந்து யாரேனும் இயக்குவோர் உள்ளனரா என்பதையும் புலனாய்வு செய்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைச் சிறைப்படுத்திட வேண்டுகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.