சீமான் விஜயலக்ஷ்மி விறுவிறுப்பாக நடைபெறும் வழக்கு விசாரணை போல் கவிதா என்ற பெண் திருமாவளவனுக்கு எதிராக அளித்த புகாருக்கு பேச மறுத்து மௌனம் சாதித்தது ஏன் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வியெழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தை சேந்த கவிதா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் என்னி டம் பழகிவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பரபரப்பபை ஏற்படுத்தியவர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பல்வேறு புகார்களை திருமாவளவன் மீது தொடர்ச்சியாக தெரிவித்து தமிழக காவல்துறையின்,டிஜிபி , கமிஷனர்,IG ,DSP ,முதல்வர் தனிப் பிரிவு உள்ளிட்டவர்களை சந்தித்து திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முறை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இது பற்றி கவிதா கூறுகையில் 2011 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் முதல் முதலில் திருமாவளவன் சந்தித்ததாகவும் அதன் பிறகு தனது முதல் கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் சட்டப்படி தனது கணவரை விவாகரத்து செய்து பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக திருமாவளவன் தெரிவித்தாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலீசில் 10 தடவை புகார் செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.
அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு அவரது கட்சிக்காரர்கள் தனது ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர் என்று தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், சீமான் விவாகரத்தில் காட்டபடும் விவகாரத்தில் திருமாவளவன் கவிதா வழக்கில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என அர்ஜுன் சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்த போதும் வைரமுத்துவின் மீது சின்மயி புகார் கொடுத்த போதும் கம்யூனிஸ்ட் ஆதரவு ஜனநாயக மாதர் சங்கம் ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பிய உள்ளார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.