அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவுக்கு எப்படி தைரியம் வந்தது? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், மாணவ மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.நடிகர் விஜய்யின் இந்த பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வரவேற்பு தெரிவித்து
நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதுவும் விஜய்அவர்கள் பேசும் போது,புரட்சியாளர் அம்பேத்கர்,தந்தை பெரியார்,பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துகள் என தெரிவித்த அவர்,
பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் புகழ் இருந்தால் போதும் முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இந்த சாபக்கேடு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது வேலையை மட்டுமே செய்கின்றனர் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
திருமாவளவனை சீண்டும் வகையில் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும்தான் திரை உலகை சேர்ந்தவர்கள், நடிகரோ, இயக்குநரோ, தொழிலை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து முதலமைச்சராகி விடலாம் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்கள்”
உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடு என்று சொல்கிற அளவிற்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அட…..அது கூட பரவாயில்லை! ஆனால், ஒட்டு மொத்தமாக திரை உலகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி கருணாநிதியை கூட விட்டு வைக்காமல் திருமாவளவன் இப்படி விமர்சித்து விட்டாரே!!!சரக்கிருக்கு, மிடுக்கிருக்கு என்கிறாரோ? என தெரிவித்துள்ளார்.