dmk alliances | தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக மற்றும் பாஜகவிடையே மும்முனை போட்டி உறுதியாகியுள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
அதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோருக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இதுவரை இறுதி செய்யப்படாத நிலையில், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழி உள்ளிட்ட தலைவர்களுடன் காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக கூட்டணிக் கட்சிகள் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வரின் இந்த ஆலோசனை நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே சென்னை அசோக் நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்னாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், தெலுங்கானாவில் 10 இடங்களிலும், கர்னாடகாவில் 6 இடங்களிலும், கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764960174488596601?s=20
மேலும், அந்தந்த மாநிலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை பொறுத்த வரை 1 பொதுத்தொகுதி உட்பட 3 தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆரம்பம் முதல் தங்களுடன் கூட்டணியில் தொடரும் காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய முக்கிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை திமுக இன்னும் முடிவுக்கு கொண்டு வராத நிலையில், திருமாவளவனின் இந்த கருத்து திமுகவிற்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.