இந்தியாவில் கடந்த சில காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே கன முதல் மிதமான மழை பெய்து வருவதால் வெயிலால் அவதி பட்டு வந்த மக்கள் குளிர்ந்த வானிலையால் சற்று நிம்மதியாக உள்ளனர் .
இந்நிலையில் தற்போது இந்தியாவின் பருவநிலை குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்த ஆண்டு 36% குறைவாக பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில், ஆகஸ்ட் மாதத்தில் 30%க்கும் மேல் குறைவாக மழை பெய்திருப்பது இதுவே முதல் முறை என்றும் எல்-நினோ எனப்படும் காலநிலை நிகழ்வே இந்த பருவநிலை மாற்றத்துக்கு காரணம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.