தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் அன்பு மகளான இவர் கார்த்தியின் நடிப்பில் உருவான விரும்பன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .
கிராமத்து கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் துள்ளிகுதிக்கும் கிராமத்து பெண்ணாக நடித்து தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .
இதையடுத்து தற்போது மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சாந்தி டாக்கிஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அன்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது மாவீரன் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை அதிதி ஷங்கரிடம் சமயல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது :
நான் நன்றாக சமைப்பேன், நான் போடும் ஆஃப் பாயில் என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் யார் இருந்தாலும் என்னை அழைக்க சொல்லி நான் போடும் ஆஃப் பாயிலை தான் என் அப்பா விரும்பி சாப்பிடுவார். எனக்கு பிரியாணி செய்யத் தெரியும், ஸ்டப் முட்டை புர்ஜியும் நன் சிறப்பாக செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.