Thirumavalavan Demand-’வி.பி.சிங், தந்தை பெரியார், கான்சிராம் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்’ என விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்தார்.
பாரத ரத்னா விருது அறிவிப்பு:
அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு :
இது குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில் ,”டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல்,
நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது என்று தெரிவித்த அவர்,விலைமதிப்பற்ற பணியை நான் எப்போதும் மதிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: OPS health | ”OPS-க்கு திடீர் உடல் நலக்குறைவு..” மருத்துவர்கள் கொடுத்த Report!
நமது முன்னாள் பிரதமர் திரு.பி.வி.நரசிம்ம ராவ் ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் கரு பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்குப் பணிபுரிந்தார்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் .
அவரது தொலைநோக்கு தலைமை இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள்,
முக்கியமான மாற்றங்களின் மூலம் இந்தியாவை வழிநடத்தியது மட்டுமல்லாமல் அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தையும் செழுமைப்படுத்திய ஒரு தலைவராக அவரது பன்முக மரபை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வி.பி.சிங், தந்தை பெரியார், கான்சிராம் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்’ என திருமாவளவன் மக்களவையில் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1755870872479637557?s=20
மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை:
ஒரே மொழி.. ஒரே மதம்..’ என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் இந்திய இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்துவதாக குற்றம்சுமத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. கடைசியாக ஒரேயொரு வேண்டுகோள்.
பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர் பாரத ரத்னா விருது வழங்கியதை நான் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.
அதேபோல சமூகநீதி காவலராக தமது வாழ்வை ஒப்படைத்துக்கொண்ட வி.பி.சிங்கிற்கும் தந்தை பெரியாருக்கும் கான்சிராமுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்” என அவர் (Thirumavalavan Demand) தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்தார்.