“தூவானம்” படத்தின் இயக்குநர் ஹரிச்சரன் (haricharan) காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரைத்துறையில், கடந்த 2007ம் ஆண்டு வெளியான “தூவானம்” படத்தின் இயக்குநர் ஹரிச்சரன் (haricharan). இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
இதே போல, மூன்று முறை தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று, அர்ஜுனா விருது பெற்றுள்ள வி. சந்திரசேகர் பயோபிக்கையும் தமிழில் இயக்கியிருந்தார் ஹரிச்சரண்.
மேலும், ஒரு விளையாட்டு பிரபலத்தை மையப்படுத்தி தமிழில் ஒளிபரப்பப்பட்ட முதல் தொலைக்காட்சி சீரியல் என்ற பெருமையையும் இது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் ஹரிச்சரன், கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
மேலும், இயக்குநர் ஹரிச்சரன் ஒரு சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போது இயக்குநர் ஹரிச்சரனின் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இயக்குநர் ஹரிச்சரனின் மனைவி ரேக்சும் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர், தமிழில் வெளியான சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சப் டைட்டில் எழுதி இருக்கிறார்.
ரேக்ஸ், நடிகர் விஜய்யின் 13 படங்களுக்கு மேல் சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, வாரிசு, எந்திரன், விக்ரம் , விண்ணைத்தாண்டி வருவாயா, பாகுபலி, கபாலி, மகரிஷி, விக்ரம் என பல திரைப்படங்களுக்கும் சப்டைட்டிலிஸ்ட் ஆர்டிஸ்ட்டாக ரேக்ஸ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் ஹரிச்சரனின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.