திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகதேசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலகப் பிரச்சித்தி பெற்ற கோவில்களில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகதேசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும், இதற்காக ரூ.300 விலையிலான டிக்கெட் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியாகும் என அறிவித்துள்ளது.