சந்திர கிரகணம் நாளை நிகழ இருப்பதால், திருமலை திருப்பதி கோவில் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சந்திர கிரகணம் :
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை தான் சந்திர கிரகணமாகும். இந்நிகழ்வு பௌர்ணமி அன்று நிகழும்.
சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுமையாக விழுந்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். சந்திரனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதிநேர சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
திருமலை திருப்பதி மூடல் தேவஸ்தானம்:
சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 முதல் 2.22 வரை நிகழ உள்ளது.இதனையொட்டி, முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆதலால் 29-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும். சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் அன்றைய மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.