KGF புகழ் யாஷ் நடிக்கும் “Yash 19 படத்தின் Title அறிவிப்பு வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அகல பாதாளத்தில் கிடந்த கன்னட சினிமாவை KGF, KGF 2 ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் வானுயர செய்தது . கன்னட சினிமாவில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வந்த நடிகர் யாஷ் இந்த படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார் .
நடிகர் யாஷிற்கு KGF படத்தின் இரண்டு பாகங்களும் புத்துயிர் கொடுத்ததுடன் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைக்கும் கதாநாயகனாக மாறிவிட்டார் .
இந்நிலையில் தற்போது நடிகர் யாஷ் நடிப்பில் Yash 19 படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது . இந்தப் படத்தை பிரபல மலையாளப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார்.
KGF படத்திற்கு பின் யாஷ் அவர்களின் அடுத்த படம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் Yash 19 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகி உள்ளது .
அதன்படி யாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு ‘Toxic’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது . ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாக இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் ஷூடிங்கை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.