புயல் பாதிப்பால் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள உள்ள பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேற்று ஆய்வு செய்தார்.ஆய்வுக்குப் பின்னர், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…
சென்னை பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது, கடந்த எட்டு ஆண்டுகளில் இது மூன்றாவது நிகழ்வாகும். பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம்.
இதற்கு தீர்வு காண, பிரதமர் நரேந்திர மோடி முதல் நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியத்தின் (NDMF) கீழ், சென்னை பகுதி ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ 561.29 கோடி, இதில் மத்திய அரசின் உதவி ரூ.500 கோடி உட்பட ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த தணிப்பு திட்டம் சென்னையை வெள்ளத்தைத் எதிர்கொள்ள உதவும்.நகர்ப்புற வெள்ளத் தணிப்பு முயற்சிகளில் இது முதன்மையானது மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான கட்டமைப்பை உருவாக்க உதவும் என்று தெரிவித்தார்.
மேலும் மிஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் விளையும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் பாதிப்பால் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, பிரதமர்SDRFன் 2வது தவணையின் மத்திய பங்கான ரூ.493.60 ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) உத்தரவிட்டுள்ளார்.
இரு மாநிலங்களுக்கும் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது.பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.