12th public exam : தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று தொடங்கும் இந்த தேர்வு மார்ச் 22ம் தேதியோடு முடிவடைகின்றது.
தேர்வு நடைபெறும் பொது முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் ஒருவேளை நடந்தால் நடவடிக்கை எடுக்கவும் 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பரீட்சை எழுதும் மாணவர்களின் வசதிக்கேற்ப அணைத்து தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்களை முழுமையாக சோதனை செய்து பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் என்றும், ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/do-you-need-a-rocket-to-remove-the-juniper-tree/
இந்த தேர்வில் ஒழுங்கீன (12th public exam) செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுதத் தடைவிதிக்கப்படும் என்றும் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்தும் பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வுத்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பல கனவுகளோடு இன்று பிளஸ் 2 பொது தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் I TAMIL NEWS சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.